விரைவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்று சுகேஷ் சந்திரசேகர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதானவர் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்பு திகார் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர், டெல்லி அமைச்சர்களுக்கு பல கோடி லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்து பரபரப்பை கிளப்பினார்.
இதனால், இவருக்கும், டெல்லி அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. இதனால் ஆம் ஆத்மி அரசு மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
குறிப்பாக, தென் தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியை வளர்ப்பதற்கு தன்னிடம் பணம் கேட்டதாகவும், தனக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி தருவதாக கூறி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பணம் பெற்றதாகவும் கூறினார். இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் கோரினார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை கெஜ்ரிவால் மறுத்தார்.
இந்த நிலையில், டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரூ.200 கோடி மோசடி வழக்கில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நேற்று ஆஜராக வந்த சுகேஷ் சந்திரசேகரிடம், மணிஷ் சிசோடியா கைது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “உண்மை வென்றது” என்று கூறியதுடன், அடுத்தது அரவிந்த் கெஜ்ரிவால்தான் சிக்குவார் என்றும் தெரிவித்தார்.
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
கலவையான விமர்சனம் சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னைய்யா ( 55 )…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்…
புகார் மீது புகார்.. சமீப காலமாகவே வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் அவரை குறித்து பல புகார்களை அடுக்கி…
This website uses cookies.