பவன் கல்யாண் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த சூப்பர்ஸ்டார் : தேர்தல் வெற்றி..ஸ்வீட் கொடுத்து வாழ்த்து!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2024, 7:56 pm

ஆந்திர மாநில சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிட்ட 21 சட்டப்பேரவை இரண்டு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதனை அடுத்து டெல்லி சென்று தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பவன் கல்யாண் தனது குடும்பத்தினருடன் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிலையில் தேர்தலில் வெற்றிக்குப் பிறகு தனது அண்ணன் நடிகர் சிரஞ்சீவியின் ஆசிர்வாதம் பெறுவதற்காக ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு பவன் கல்யாண் சென்றார்.

மேலும் படிக்க: நடவடிக்கை எடுக்காத போலீஸ்.. காவல் நிலையம் முன்பு மண்ணென்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற 3 பெண்கள்!

பவன் கல்யாண்க்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினர் ரோஜா இதழ்களால் பிரம்மாண்ட வரவேற்பு அளித்த கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாழ்த்து தெரிவித்தனர்.

இதனையடுத்து தனது அம்மா, அண்ணி ஆகியோரின் கால்களில் விழுந்து பவன் கல்யாண் ஆசீர்வாதம் பெற்றார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 332

    0

    0