மின் கட்டண உயர்வை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட விவகாரம் : தமிழக அரசுக்கு ‘ஷாக்’ கொடுத்த உச்சநீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 அக்டோபர் 2022, 12:58 மணி
Supreme Court Order - Updatenews360
Quick Share

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்துள்ளது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீடுகளுக்கான மின் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னதான் தமிழக அரசு நிதிச்சுமையை காரணம் காட்டி விளக்கம் அளித்தாலும் எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மின்கட்டண உயர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

மேலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 மாதத்தில் சட்டத்துறை அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதனையடுத்து தமிழக அரசு நியமனம் செய்யவில்லை என்றால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 513

    0

    0