4 வருஷமா இந்த வழக்கு நடக்குது.. ஒரு வாரத்துக்கு ஒத்திவைச்சா ஒண்ணும் ஆகாது : மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி!

Author: Udayachandran RadhaKrishnan
20 July 2022, 12:16 pm

காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி, உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையும் நிரம்பியநிலையில் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதிக்க கூடாது என தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடும் எதிர்ப்பு பதிவு செய்து வந்த நிலையில் 3 முறை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக்கூடாது என தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையின்போது, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடத்த தடை இல்லை.

மேகதாது குறித்த விரிவான திட்ட அறிக்கை குறித்து ஆய்வு செய்து விவாதிக்கலாம், ஆனால் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக எந்த முடிவும் ஆணையம் எடுக்க கூடாது.

மேகதாது குறித்து விவாதிக்கலாமா என்பது குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தை அறிய விரும்புகிறோம் என்று தெரிவித் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என்றும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீது சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு சுப்ரீம்கோர்ட்டு ஒத்திவைத்தது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
  • Close menu