சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள்… பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்சே : காத்திருக்கும் விமானம்…வெளிநாடு தப்பி செல்ல முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2022, 9:00 am

கொழும்பு : அலரி மாளிகையில் இருந்து பலத்த இராணுவ பாதுகாப்புடன் மகிந்த ராஜபக்சே வெளியேறினார்.

இன்று அதிகாலை பலத்த இராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியேறியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை அலரி மாளிகையை சுற்றியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையிலேயே இன்று அதிகாலை பலத்த இராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்திற்கு பணிக்காக சென்ற பலர் இன்னும் அங்கு சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ள மகிந்த வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் செல்லலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

நைஜீரியாவில் இருந்து சிறப்பு விமானம் ஒன்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்