தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியீடு.. முதல் 100 இடங்களில் இல்லாத தமிழக நகரங்கள்… சென்னை, கோவையின் நிலை தெரியுமா..?

Author: Babu Lakshmanan
11 January 2024, 6:52 pm
Quick Share

2023 ஆம் ஆண்டிற்கான தூய்மையான நகரங்களின் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தூர் மற்றும் சூரத் ஆகிய இரு நகரங்கள் முதலிடத்தை பிடித்துள்ளன.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் தூய்மை இந்தியா திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. நகரங்களை தூய்மைப்படுத்தும் முயற்சியாக, தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்களை கண்டறிந்து, அதனை தொடர்ந்து ஊக்குவிக்கும் விதமாக, கடந்த 2016 ஆம் ஆண்டு ‘ஸ்வஸ் சர்வேக்சான்’ என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது, முதல் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. தூய்மையில் சிறப்பாக இருக்கும் நகரங்கள் பற்றிய பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டிற்கான பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தூர் மற்றும் சூரத் ஆகிய இரு நகரங்கள் முதலிடத்தை பிடித்துள்ளன. இதன்மூலம், இந்தூர் நகரம் தொடர்ச்சியாக 7வது முறை முதலிடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக, நவி மும்பை 3 வது இடத்தை பிடித்துள்ளது.

4வது இடத்தில் விசாகப்பட்டினமும், 5வது போபாலும், 6வது இடத்தில் விஜயவாடாவும், 7வது இடத்தில் டெல்லியும், 8வது இடத்தில் திருப்பதியும், 9 மற்றும் 10வது இடங்களில் முறையே ஐதராபாத் மற்றும் புனே நகரங்கள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளது.

தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதல் 100 இடங்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்த எந்த நகரங்களும் இடம்பெறவில்லை என்பது வேதனையளிக்கக் கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு கோவை 42வது இடத்தையும், சென்னை 44வது இடத்தையும், மதுரை 45 இடத்தையும் பிடித்திருந்தது. ஆனால், தற்போது, 100 இடங்களை தாண்டியே பட்டியலில் இந்த நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

அதிகபட்சமாக திருச்சி 112வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த முறை 262 இடத்தில் இருந்த முன்னேற்றம் கண்டு இந்த இடத்தை பிடித்துள்ளது. அதேபோல, தூத்துக்குடி 179வது இடத்தையும், கோவை 182வது இடத்தையும், சென்னை 199வது இடத்தையும் பிடித்துள்ளது.

அதேவேளையில், ஸ்வஸ் சர்வேக்சான் திட்டத்தின் கீழ் சிறப்பாக விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடமும், மத்திய பிரதேசம் 2 வது இடமும், சத்தீஸ்கர் 3வது இடமும் பிடித்துள்ளது. முதல் இடம் பிடித்துள்ள நகரங்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெற்றிக்கான விருதை அம்மாநில அதிகாரிகளிடம் வழங்கி கெளரவித்தார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 627

    0

    0