எத்தனை நாள் லீவு வேணுமோ எடுத்துக்கோங்க… Unlimited Holidays அறிவித்த பிரபல ஐ.டி நிறுவனம் : உற்சாகத்தில் ஊழியர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan3 May 2022, 6:32 pm
கொரோனா தொற்றின் போது, நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியதால், பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்குவித்தன.
அதன்படி ஊழியர்கள் வீட்டில் இருந்துகொண்டே அலுவக பணிகளை செயத்னர். பின்னர் தொற்றி தீவிரம் குறைந்த காரணமாக பல நிறுவனங்களும் ஊழியர்களை மீண்டும் அலுவகத்தில் வந்து பணிபுரியுமாறு அழைத்தன.
பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதையே விரும்புவதாகச் சொல்லி, அலுவலகத்துக்குத் திரும்புவதில் சுணக்கம் காட்டி வந்தனர். ஆனாலும், நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகம் வந்து பணிபுரிய வலியுறுத்தின.
இப்படி ஒரு பக்கம் நிலைமை இருந்தாலும், ஊழியர்களின் விருப்பமே முக்கியம் என்ற வகையில் நியூசிலாந்தில் உள்ள மென்பொருள் நிறுவனமான (Actionstep) ஊழியர்களுக்கு காலவரையறையற்ற ஆண்டு விடுப்பை அளிப்பதாக அறிவித்துள்ளது.
அதன்படி ஊழியர்கள் எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம், அவர்கள் தேவையான விடுமுறையை எடுத்துக்கொண்டு பின்னர் அலுவலகத்துக்கு வரும் போது சிறப்பாக வேலை செய்ய இந்த விடுமுறை வழிவகுக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறைந்தபட்சம் நான்கு வாரங்கள் வரை விடுப்பு எடுக்கலாம் என்றும் மகப்பேறு விடுப்பு, அவசர கால விடுப்பு, மருத்துவ விடுப்பு போன்ற அனைத்து நாட்களையும் இந்த விடுமுறை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல நிறுவனங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.