திருப்பதி சென்ற தமிழக அரசு பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து : 5 பேர் கவலைக்கிடம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2022, 6:01 pm

திருப்பதி : காளஹஸ்தி அருகே தமிழ்நாடு அரசு பேருந்து, லாரி ஆகியவை நேருக்கு நேர் மோதி விபத்துக்குளானதில் டிரைவர்கள், கண்டக்டர் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து 20 பயணிகளை ஏற்றி கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று திருப்பதிக்கு வந்து கொண்டிருந்தது.

திருப்பதி காளஹஸ்தி இடையே உள்ள மெர்லபாக்கத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த லாரி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு வாகனங்களின் முன் பகுதிகளும் கடுமையாக சேதமடைந்த நிலையில் பேருந்தின் ஓட்டுநர் முனிராஜ், கண்டக்டர் சுரேஷ், காட்பாடியை சேர்ந்த லாரி ஓட்டுனர் கார்த்திகேயன் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்து பற்றி தகவல் அறிந்த ஏற்பேடு போலீஸார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Samuthirakani interview மிஷ்கினை பற்றி உங்களுக்கு என்னங்க தெரியும்…நடிகர் சமுத்திரக்கனி ஆவேசம்.!
  • Copyright © 2025 Updatenews360
    Close menu