அன்னதானம் சாப்பிட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி : திருப்பதி ஏழுமலையானை குடும்பத்துடன் தரிசனம் செய்து வழிபாடு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2022, 9:57 am

ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்டு அன்னதான கூடத்தில் சிற்றுண்டி சாப்பிட்ட தமிழக ஆளுநர்.

தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சாமி கும்பிடுவதற்காக நேற்று மாலை திருப்பதிக்கு வந்தார்.

குடும்பத்துடன் திருப்பதிக்கு வந்த அவர் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கோமந்திர் எனப்படும் பசு வழிப்பாட்டு மையத்திற்கு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு நடத்தினார்.

தொடர்ந்து ஒரு பசுவின் எடைக்கு இணையாக 450 கிலோ தீவனத்தை துலாபார காணிக்கையாக சமர்ப்பித்தார்.

தொடர்ந்து திருப்பதி மலைக்கு சென்று இரவு தங்கிய அவர் இன்று காலை கோவிலுக்கு சென்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார்.

சாமி கும்பிட்ட பின் அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி சமர்ப்பித்தனர்.

பின்னர் திருப்பதி மலையில் உள்ள அன்னதான கூடத்திற்கு சென்ற அவர் குடும்பத்துடன் சிற்றுண்டி சாப்பிட்டார்.

  • sincere thanks to ajith kumar sir shared by arjun das என் மேல நம்பிக்கை வச்சதுக்கு மிக்க நன்றி அஜித் சார்- அர்ஜுன் தாஸ் உருக்கம்