தேவஸ்தானத்திற்கு ரூ.4,500 செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி : திருப்பதி மலை அடிவாரத்தில் நடந்தது என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
29 December 2022, 7:05 pm

தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சுவாமி கும்பிடுவதற்காக இன்று மாலை குடும்பத்துடன் திருப்பதிக்கு வந்தார்.

திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கோமந்திர் எனப்படும் பசு வழிபாட்டு மையத்திற்கு சென்று பூஜைகள் நடத்திய ஆளுநர் பசுக்களுக்கு உணவு வழங்கினார்.

அங்கிருந்து திருப்பதி மலைக்கு புறப்பட்ட சென்ற அவர் நாளை காலை ஏழுமலையானை வழிபட இருக்கிறார். பசு வழிபாட்டு மையத்தில் அவரை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சென்னை மண்டல ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி வரவேற்றார்.

திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கோ மந்திரில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒரு பசுவின் எடைக்கு சமமான எடையில் 500 கிலோ தீவனத்தை துலாபார காணிக்கையாக சமர்ப்பித்தார்.

இதற்காக அவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நான்காயிரத்து ஐநூறு ரூபாய் தீவனத்திற்கு உரிய பணத்தை செலுத்தினார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!