ரூ.371 கோடி முறைகேடு..? நள்ளிரவில் கதவை தட்டிய போலீஸ்… இரவோடு இரவாக முன்னாள் முதலமைச்சர் கைது… ஆந்திராவில் பரபரப்பு..!!!

Author: Babu Lakshmanan
9 September 2023, 8:43 am

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை முறைகேடு வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2019ம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் நடந்த ஒப்பந்தத்தில் ரூ.371 கோடி முறைகேடு நடந்ததாக ஆந்திர மாநில முன்னாள் முதல் அமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்று அதிகாலை 3 மணிக்கு அவரை கைது செய்ய நந்தயால் போலீசார் முடிவு செய்தனர். இதற்காக டிஐஜி தலைமையிலான போலீசார், அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது, கைதுக்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பிய சந்திரபாபு நாயுடு, இது சட்டவிரோதம் என போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்து அங்கு குவிந்த தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள், போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, நீண்ட போராட்டத்திற்கு பிறகு காலை 6 மணியளவில் சந்திரபாபுவை போலீசார் கைது செய்து விஜயவாடாவுக்கு அழைத்துச் சென்றனர்.

சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து, ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் தெலுங்கு தேச கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • ajith kumar team won second place belgium car race விபத்துக்கு கிடைத்த வெகுமதி- கார் ரேஸில் மீண்டும் தடம் பதித்த அஜித்குமார்! மாஸ் காட்டுறாரே!