பட்டப்பகலில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்… வலுக்கட்டாயமாக தொல்லை கொடுக்கும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
28 April 2023, 7:12 pm

பட்டப்பகலில் பள்ளியின் வகுப்பறையில் மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் ஐடிஐ அரசு தொழில் நிறுவன கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த இயற்பியல் ஆசிரியரும், சமூக ஆர்வலருமான அருணேஷ் குமார் யாதவ் என்பவர், “கற்பழிப்பவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படுவது நமது மாநிலத்தில் துரதிருஷ்டவசமான சம்பவம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரான விஜய்சிங்கை உத்தரபிரதேச போலீசார் கைது செய்தனர். ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது இச்சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/YadavArunesh/status/1651442165753733120?s=20
  • 30-year-old actress plays wife of 75-year-old actor.. actress shobanaa uthaman explain 75 வயது நடிகருக்கு மனைவியாக நடித்த 30 வயது நடிகை.. ஒப்புக்கொண்டது ஏன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!