ஆசிரியர் பணி நியமன முறைகேடு… அமைச்சர் தொடர்புடைய வீடுகளில் கட்டு கட்டாக சிக்கிய பணம்… உதவியாளரோடு கைதான அமைச்சர்..!!

Author: Babu Lakshmanan
23 July 2022, 11:20 am

ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் மேற்கு வங்க கல்வித்துறை அமைச்சர் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் மற்றும் அவரது தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். தெற்கு கொல்கத்தாவில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் அமைச்சரின் நெருங்கிய பெண் உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.20 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

இதன் அடிப்படையில், மேற்குவங்க கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார். அவரிடம் நேற்று இரவு முதல் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து, அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அமைச்சரும், அவரது நெருங்கிய உதவியாளரும் முறைகேடு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டிருப்பது மேற்குவங்க அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ