பேனர்கள் கிழிப்பு… காங்கிரஸ் பிரமுகரின் காரை வழிமறித்து பாஜகவினர் போராட்டம் : ராகுல் யாத்திரையில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
21 January 2024, 5:49 pm

பேனர்கள் கிழிப்பு… காங்கிரஸ் பிரமுகரின் காரை வழிமறித்து பாஜகவினர் போராட்டம் : ராகுல் யாத்திரையில் பரபரப்பு!

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மணிப்பூரில் தொடங்கி நாகாலாந்து வழியாக அஸ்ஸாமில் நடைபெற்று வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு, ராகுல் காந்தி யாத்திரைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

ராகுல் காந்தி யாத்திரைக்கு அஸ்ஸாம் பாஜக அரசு நெருக்கடி தருவதை ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் ராகுல் காந்தி யாத்திரையில் பங்கேற்க சென்ற ஜெய்ரா ரமேஷ் காரை பாஜகவினர் சூழ்ந்து கொண்டு தாக்கி இருக்கின்றனர். பாரத் ஜோடோ நியாய யாத்திரை ஸ்டிக்கர்களையும் அவரது காரில் இருந்து கிழித்து எறிந்து உள்ளனர் பாஜகவினர்.

அத்துடன் ஜெய்ராம் ராமேஷுக்கு எதிராகவும் ராகுல் காந்தி யாத்திரைக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியும் தண்ணீரை இறைத்தும் பாஜகவினர் போராட்டம் நடத்தி இருக்கின்றனர்.

அஸ்ஸாம் மாநிலம் சோனிட்பூரில் நடைபெற்ற இத்தாக்குதலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் சம்பவத்தின் வீடியோக்களையும் ஜெய்ராம் ரமேஷ் தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அஸ்ஸாமின் லக்கிம்பூரில் ராகுல் காந்தி யாத்திரை வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ராகுல் காந்தி படத்துடனான பேனர்களையும் பாஜகவினர் கிழித்தெறிந்திருந்தனர். இதனால் அஸ்ஸாமில் ராகுல் காந்தி யாத்திரை பதற்றத்துடனேயே நடைபெற்று வருகிறது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!