சாலையில் பல்டி அடித்த கார் மீது லாரி மோதி விபத்து… இரு குழந்தைகள் உள்பட 5 பேர் பலி ; அதிகாலையில் நடந்த பயங்கரம்!!

Author: Babu Lakshmanan
29 January 2024, 11:36 am

தெலங்கானாவில் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது, நிகழ்ந்த சாலை விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள நந்திப்பாடு கிராமத்தை சேர்ந்த ஆறு பேர் ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள கோவில் ஒன்றுக்கு சென்று சாமி கும்பிட்ட பின் காரில் ஊர் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் பயணித்த கார் இன்று அதிகாலை தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிரியாளகுடா அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் திடீரென்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடைபெற்ற சமயத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி கார் மீது வேகமாக மோதி கார் நசுங்கியது.

விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேர் உடல் நசுங்கி காருக்குள்ளே பரிதாபமாக மரணமடைந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் படுகாயம் அடைந்தவரை மீட்டு நலகொண்டா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

மரணமடைந்த ஐந்து பேரின் உடல்களும் நலகொண்டா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 357

    0

    0