I.N.D.I.A கூட்டணி குறித்து தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வரும் 2024ம் ஆண்டு நடக்கப் போகும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்த வகையில், இந்தியாவில் உள்ள பல எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து I.N.D.I.A என்ற கூட்டணியை அமைத்துள்ளன. ஆனால், இந்தக் கூட்டணியில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாயாவதி கட்சி, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆளும் சந்திரசேகர் ராவ் கட்சி, ஆந்திராவில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி கட்சி ஆகியவை இணையவில்லை.
இந்த நிலையில், I.N.D.I.A கூட்டணி மற்றும் NDA ஆகிய 2 கூட்டணியிலும் நாங்கள் இல்லை என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போதும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று கூறிய அவர், நாங்கள் இரண்டு பக்கத்திலும் செல்ல விரும்பவில்லை என்றும், அதே நேரத்தில் நாங்கள் தனியாகவும் இல்லை, எங்களுக்கும் சில நண்பர்கள் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
சந்திரசேகர ராவின் இந்த கருத்தை தொடர்ந்து மூன்றாவது அணி அணி அமைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.