தெலங்கானா-தான் அடுத்த டார்க்கெட்… களமிறங்கிய பிரதமர் மோடி, அமித்ஷா… பாஜக போட்ட மாஸ்டர் பிளான்..!

Author: Babu Lakshmanan
2 July 2022, 2:29 pm

வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் கால் பதிக்க வேண்டும் என்று முனைப்பில் ஈடுபட்டு வரும் பாஜக, அடுத்து தெலுங்கானாவை இலக்காக வைத்து செயல்படுவது அம்பலமாகியுள்ளது.

வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் கால் பதிக்க வேண்டுமென்ற முனைப்பில் ஈடுபட்டுவரும் மோடி அமித்ஷா தெலுங்கானாவில் தனது தளத்தை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் எதிரொலியாகவே 18 ஆண்டுகளுக்குப் பிறகு தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் தனது செயற்குழுக் கூட்டத்தை அக்கட்சி அன்று நடத்துகிறது. இதேநேரத்தில் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தொடர்ந்து பிரதமரை அவமதிக்கும் வகையில் நடந்து வரும் நிலையில், தெலுங்கானாவை கைப்பற்றியே தீர வேண்டும் என்ற முனைப்பில் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா தீர்க்கமாக உள்ளதாக கூறப்படுகிறது.

வட இந்தியாவைப் போன்று தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என்பதே பாஜகவின் நீண்ட கால ஏக்கமாகும். எனவே, தென்னிந்தியாவில் கால்பதிக்கத் தேவையான நடவடிக்கைகளில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்திலும் கட்சியை பலப்படுத்த தேவையான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பாஜக, அண்ணாமலை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்து வருகிறது.

அதேவேளையில், தமிழகத்தை விட, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பாஜகவின் வியூகம் ஓரளவுக்கு எடுபடுவதால் அம்மாநிலங்களில் முழு கவனத்தையும் செலுத்த கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது. அதன், காரணமாகவே 18 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் பாஜகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை பாஜக அங்கு நடத்துகிறது. ஏற்கனவே, பிரதமர் வாஜ்பாய் காலத்தில் செயற்குழு கூட்டத்தை பாஜக அங்குதான் நடத்தியது.

தமிழகத்தில் திராவிட கட்சிகளும், கேரளாவில் கம்யூனிஸ்ட்டும் வேரூன்றி இருப்பதால்,அங்கு நேரத்தை வீணடிக்க விரும்பாத பாஜக, தனது முழு கவனத்தையும் தெலுங்கானாவின் பக்கம் திருப்பியுள்ளது. அதாவது. தெலுங்கானா மக்கள் பாஜகவின் கொள்கை மற்றும் அதன் செயல்பாடுகளை ஏற்க தொடங்கியுள்ளனர்.
இதன் விளைவாகவே அம்மாநிலத்தில் காங்கிரஸை பின்னுக்குத்தள்ளி பாஜக இரண்டாம் இடம் கைப்பற்றியுள்ளது.

அதேவேளையில், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை தெலுங்கானா மாநிலத்திற்கு மூன்று முறை வந்த பிரதமர் மோடியை வரவேற்க வராத கேசிஆர், தற்போது எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்காவை நேரில் சென்று வரவேற்றதும், பாஜகவினருக்கு சற்று எரிச்சலையூட்டியுள்ளது.

எனவே, மக்களின் ஆதரவு இருக்கும் போது, அதனை சரியாக பயன்படுத்தி எதிர்வரும் தேர்தலில் அங்கு ஆட்சியை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில்தான் அம்மாநிலத்தில் உள்ள தனது கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், பாஜக தனது செயற்குழுக் கூட்டத்தை நடத்த முன்வந்துள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் 17 இடங்களில் 4ல் பாஜக வெற்றி பெற்றது அக்கட்சியினருக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதனால், பாஜகவின் தலைமைக்கு புதிய தெம்பு ஏற்பட்டது.

அதேபோல், கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் கிடைத்த கணிசமான வெற்றியும், தெலங்கானாவை பாஜக தேர்வு செய்ய முக்கிய காரணமாக அமைந்தது. இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகரித்து வருவது, முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தொடர்ந்து பாஜகவை அவமதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது போன்ற காரணங்களால், அடுத்த தேர்தலில் தெலங்கானாவை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற எண்ணம் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உதயமாகியுள்ளது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 936

    0

    0