‘போட்றா, தம்பி பிரேக்க’…. பிரச்சார வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தெலங்கானா அமைச்சர் KTR… ஷாக் வீடியோ..!!!

Author: Babu Lakshmanan
9 November 2023, 4:44 pm

தேர்தல் பிரச்சாரத்தின் போது வாகனத்தில் இருந்து அமைச்சர் தவறி விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் 30ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய நவம்பர் 10ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுவை வாபஸ் பெற நவம்பர் 15ம் தேதி இறுதி நாளாகும்.

மொத்தம் 3 கோடி பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களாவர். அதில், 17 லட்சம் பேர் முதல்முறை வாக்களிக்க உள்ளனர்.

இந்த நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்தவரும், தொழில்நுட்பத்துறை அமைச்சருமான கேடி ராமாராவ் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

நிஷமாபாத் மாவட்டம் அர்மூர் பகுதியில் திறந்த வெளியில் பிரச்சாரம் செய்யச் சென்ற போது, வேன் ஓட்டுநர் திடீரென பிரேக்கை பிடித்துள்ளார். அப்போது, வாகனத்தின் மேலே அமைச்சர் கேடிஆர் மற்றும் அவருடன் நின்றிருந்தவர்களின் பாரம் தாளாமல் கம்பி முறிந்து, அனைவரும் கீழே விழுந்தனர். இதில், அமைச்சர் கேடிஆர் சிறுசிறு காயங்களுடன் உயிர்தப்பினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/i/status/1722548746104532992

  • Kumbh Mela Monalisa Was she sexually harassed by the arrested director கதறி அழுத கும்பமேளா மோனாலிசா : கைதான இயக்குநரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டாரா?