காலியாகும் காங்கிரஸ்.. காவியாகுமா தெலுங்கானா? வெளியானது புதிய கருத்து கணிப்புகள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 November 2023, 2:46 pm

காலியாகும் காங்கிரஸ்.. காவியாகுமா தெலுங்கானா? வெளியானது புதிய கருத்து கணிப்புகள்!!!

தெலுங்கானாவில் மொத்தம் 119 இடங்கள் உள்ள நிலையில், ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க 60 இடங்களில் வெல்ல வேண்டும். இப்போது அங்கே கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பிஆர்எஸ் இறங்குகிறது.

மறுபுறம் ஒருங்கிணைந்த ஆந்திராவில் காங்கிரஸ் செல்வாக்காக இருந்தது. ஆனால், ஆந்திரா, தெலுங்கானா இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட போது காங்கிரஸ் இரு மாநிலங்களிலும் செல்வாக்கை இழந்தது. விட்ட அந்த இடத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் இந்த முறை இறங்குகிறது. ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் தேர்தலைச் சந்திக்கிறது.

இதற்கிடையே தெலுங்கானா சட்டசபைத் தேர்தல் தொடர்பாக ஜன்மத் என்ற அமைப்பு நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் தெலுங்கானா தேர்தலில் பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் என இரு கட்சிகளும் ஒரே அளவிலான சீட்களை பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தெலுங்கானாவில் கடும் போட்டி இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

தெலுங்கானாவைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 119 இடங்கள் இருக்கும் நிலையில், பெரும்பான்மை பெற எந்தவொரு கட்சியும் குறைந்தது 60 இடங்களில் வெல்ல வேண்டும். இதற்கிடையே தெலுங்கானாவில் காங்கிரஸ் 53-55 இடங்களில் வெல்லும் என்று ஜன்மத் அமைப்பு கூறியுள்ளது.

அதேபோல தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பிஆர்எஸ் கட்சியும் 53-55 இடங்களில் வெல்லும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் கடும் போட்டி இருப்பது தெரிகிறது.

அதேபோல இந்த தெலுங்கானா தேர்தலில் பாஜக 4 அல்லது 5 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று ஜன்மத் அமைப்பின் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. அதேபோல ஒவைசியின் மஜ்லீஸ் கட்சி வழக்கம் போல 6, 7 இடங்களில் வெல்லும் என்று அந்த ஜன்மத் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளும் சுயேச்சைகளும் 1 அல்லது 2 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று ஜன்மத் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

தெலுங்கானாவைப் பொறுத்தவரை அங்கே இதுவரை வந்த பல சர்வேகளில் போட்டி இருந்தாலும் கூட காங்கிரஸ் தான் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றே கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த சர்வேயில் இரு கட்சிகளுக்கும் ஒரே அளவில் சீட் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் தேர்தல் நெருங்க நெருங்க பிஆர்எஸ் கட்சி தனது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி உள்ளதையே இது காட்டுகிறது. காங்கிரஸிலும் பல தலைவர்களுக்கு சீட் இல்லாததால் அதிருப்தியில் உள்ளனர். இதுவும் புது சர்வே முடிவுக்கு ஒரு காரணமாகும்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 397

    0

    0