தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. அவசரப் பிரிவில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் மருத்துவர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2022, 4:57 pm

ஐதராபாத் கட்ச்பவுலியில் உள்ள கான்டினென்டால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.

தெலுங்கு திரை உலகின் பழம்பெரும் நடிகரான சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா உடல்நிலை பாதிப்பு காரணமாக இன்று ஹைதராபாத் கட்ச்பவுலியில் உள்ள கான்டினென்டல் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவுக்கு கடந்த சில மாதங்களாகவே நுரையீரல் தொடர்பான உடல் உபாதைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் மழைக்காலம் துவங்கி இருப்பதால் அவருக்கு மூச்சு விடுவதில் இன்று அதிகாலையில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே குடும்ப உறுப்பினர்கள் அவரை கட்ச்பவுலியில் உள்ள கான்ட்டினென்டல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நடிகர் கிருஷ்ணா, நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Famous Malaysian singer commits suicide? Tragic end with mother!! பிரபல நடிகர் தற்கொலை? 11வது மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவு!!