மனைவியை விட்டு பிரிந்து வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவன்… வீடு புகுந்து அடித்து தூக்கிய பாசக்கார மனைவி…!!!

Author: Babu Lakshmanan
13 April 2022, 1:01 pm

தன்னை கைவிட்ட கணவன் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதை அறிந்து உறவினர்களுடன் சென்று கணவரை தாக்கி காவல் நிலையத்தில் மனைவி ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை நகரைச் சேர்ந்தவர் டாக்டர் பானு பிரகாஷ். தனியார் மருத்துவமனை ஒன்றில் டாக்டர் பானு பிரகாஷ் பணியாற்றி வருகிறார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள பானு பிரகாஷ் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரைப் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியாக இருந்து வருகிறார்.

மேலும், மனைவியிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் அவருடைய மனைவி கணவருடன் சேர்ந்து வாழ்வேன் என்றும், கணவரை பிரிய எனக்கு மனம் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இவ்வழக்கு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மருத்துவர் பானு பிரகாஷ், வேறு ஒரு பெண்ணுடன் அப்பகுதியில் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதனை அறிந்த மனைவி தனது உறவினர்களுடன் அங்கு சென்று கணவருக்கு தர்ம அடி கொடுத்தார். மேலும், தன்னுடைய கணவரின் அந்தரங்க லீலைகள் பற்றி அந்த மனைவி காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த போலீசார் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்துகின்றனர்.

இந்த நிலையில், டாக்டரின் மனைவி தன்னுடைய திருமணத்தின்போது, 10 லட்ச ரூபாய் பணமும், 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களும் வரதட்சணையாக அவருக்கு கொடுக்கப்பட்டது. வரதட்சணையாக கிடைத்த பணம், நகை ஆகிய அனைத்தையும் அவர்களே வைத்துக் கொண்டனர்.

இந்த நிலையில் மேலும் வரதட்சணை கேட்டு என்னை பேருந்து நிலையத்தில் விட்டு சென்றுவிட்டார். என்னுடைய கணவர் அதன் பின்னர் வீட்டுக்கு வருவதில்லை.. தற்போது என்னிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார் என்று கூறினார்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 1628

    0

    0