டெல்லியில் பயங்கர நிலநடுக்கம்… 1 நிமிடம் நீடித்ததால் பதற்றம் : ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு!!
Author: Udayachandran RadhaKrishnan12 November 2022, 8:39 pm
நேபாளத்தில் இன்று மாலை 7. 57 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கமானது 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது.
டெல்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத்தில் 54 நொடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்தனர். அந்த நிலநடுக்கமும் டெல்லியில் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.