பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து : 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை உயரும் அபாயம்!!
Author: Udayachandran RadhaKrishnan31 May 2023, 8:46 pm
பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து : 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை உயரும் அபாயம்!!
திருப்பதி மாவட்டம், வரதையபாலம் மண்டலம், எல்லக்கட்டவா கிராமத்தின் புறநகரில் உள்ள பட்டாஸ் குடோனில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், இருவர் படுகாயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி சடலங்களை மீட்டனர்.
பட்டாஸ் தயாரிக்கும் போது இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் நாகேந்திரன் 26, சங்கரய்யா 56, எதுகொண்டலு 41 ஆகிய 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.காவல்துறையினர் கல்யாண் என்ற நபரை தேடி வருகின்றனர்.
இதில் பட்டாஸ் குடோன் உரிமையாளர் வீரய்யா பலத்த காயம் அடைந்தார்.காயமடைந்தவர்களை புச்சி நாயுடு கண்ட்ரிகா மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.