ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் : மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2022, 4:07 pm

ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் லஷ்மணன் உட்பட 3 பேர் வீர மரணம் அடைந்தனர்.

ராஜோரி அருகே ராணுவ முகாமில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மதுரை புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்தார்.

பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிசண்டையில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தாக்குதலின் போது சுபேதார் ராஜேந்திர பிரசாத், ரைபிள்மேன் மனோஜ் குமார் மற்றும் ரைபிள்மேன் லக்ஷ்மணன் டி ஆகியோர் உயிரிழந்தனர். வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயன்ற 2 பயங்கரவாதிகளும் இறந்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 724

    0

    0