தமிழகத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி : ராம்நாத் கோவிந்துக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2022, 10:53 am

இந்தியக் குடியரசுத் தலைவராக வெற்றிகரமாக தனது பணியினை நிறைவு செய்துள்ள ராம்நாத் கோவிந்திற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

இன்று இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்மு அவர்கள் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், குடியரசுத் தலைவராக வெற்றிகரமாக தனது பணியை நிறைவு செய்துள்ள ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், இந்திய குடியரசுத் தலைவராக உங்கள் பதவி காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் 2021-இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் எனது அழைப்பை ஏற்று தாங்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததை இத்தருணத்தில் நினைவு கூறுகிறேன்.

நாட்டின் குடியரசுத் தலைவராக எங்கள் மாநிலத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு தங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தங்களின் வளமான அனுபவத்தால் நாடு தொடர்ந்து பயன் பெறும் என்று நான்
உறுதியாக நம்புகிறேன். நல்ல உடல் நலத்துடன் அமைதியான வாழ்வு அமைந்திட வாழ்த்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 667

    0

    0