நிலவை தொட காரணமே அதுதான் : சந்திரயான் 3 விண்கலத்துக்கு வழிகாட்டியது யார் தெரியுமா?!!

Author: Udayachandran RadhaKrishnan
23 ஆகஸ்ட் 2023, 8:14 மணி
Chandrayaan 2 & 3 - Updatenews360
Quick Share

நிலவை தொட காரணமே அதுதான் : சந்திரயான் 3 விண்கலத்துக்கு வழிகாட்டியது யார் தெரியுமா?!!

உலகிலேயே ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய வல்லரசு நாடுகள் மட்டுமே இதுவரை செயற்கைக்கோளை அனுப்பி சாதித்து உள்ளன. இதில் 4 வது நாடாக இணைந்து இருக்கிறது வளரும் நாடான இந்தியா. இதில் குறிப்பிடத்தக்க சாதனையை என்னவென்றால் மேலே சொல்லப்பட்ட 3 நாடுகளாலும் தொட முடியாத நிலவின் தென் துருவத்தை சந்திரயான் 3 திட்டத்தின் மூலமாக இந்தியா தொட்டு உள்ளது.

இதற்காக பல்வேறு தோல்விகளையும் வலிகளையும் இஸ்ரோ சந்தித்து உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு நிலவில் இந்தியாவின் கொடியை நாட்ட விரும்பினார்கள் விஞ்ஞானிகள். அதன்படி சந்திரயான் 1 விண்கலம் கடந்த 2008 ஆம் ஆண்டு நிலவை நோக்கி அனுப்பப்பட்டது. ஆனால், அது தோல்வி அடைந்தது.

அதில் இருந்து பாடம் கற்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை கொண்டு சந்திராயன் 2 விண்கலத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் நிலவை நோக்கி ஏவினர். ஆனால், ரோவர் கருவி தரையிறங்கும்போது நிலவின் மேற்பறப்பில் வேகமாக மோதி வெடித்து சிதறியது.

அதன் தொடர்ச்சியாகவே சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கினர். இம்முறை எந்த நாடுகளுமே தொட்டிடாத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க முடிவு செய்த இஸ்ரோ அதற்கான முன் ஏற்பாடுகளை செய்து, கச்சிதமான திட்டத்துடன் கடந்த ஜூலை 14 ஆம் தேதி சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவியது.

நேற்று நிலவை சந்திரயான் 3 நெருங்கியவுடன் அதை வரவேற்றதே சந்திரயான் 2 இன் ஆர்பிட்டர்தான். அது சரியாக வேலை செய்து வந்ததால்தான் சந்திரயான் 3 இல் ஆர்பிட்டரையே வைக்காமல் இஸ்ரோ அனுப்பி இருக்கிறது. சந்திரயான் 2 இன் ஆர்பிட்டர் வழங்கிய தெளிவான வழிகாட்டுதல்களால்தான், சந்திரயான் 3 முறையாக நேர்த்தியாக தரையிறங்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது. சந்திரயான் வெற்றியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையிலான குழுவிற்கும் பெரும் பங்கு உள்ளது.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 652

    1

    0