அமலாக்கத்துறை அனுப்பிய 8வது சம்மன்… விசாரணைக்கு தயார் : கெஜ்ரிவால் எடுத்த முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2024, 9:40 am

அமலாக்கத்துறை அனுப்பிய 8வது சம்மன்… விசாரணைக்கு தயார் : கெஜ்ரிவால் எடுத்த முடிவு!

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த நவம்பர் 2ம் தேதி ஆஜராகும் படி சம்மன் அனுப்பியிருந்தது.

ஆனால் அந்த சமயத்தில் மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலியில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுடன் இணைந்து பேரணி ஒன்றில் கலந்துகொண்டதால் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இதையடுத்து, 2 வது முறை ஆஜராக கடந்த மாதம் 21 ஆம் தேதி அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் 10 நாள் தியானப் பயிற்சியில் ஈடுபட இருப்பதால் விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகி இருந்தது.

தொடர்ந்து3,4,5 என அடுத்தடுத்து சம்மன் அனுப்பியும் மதிக்காத கெஜ்ரிவாலுக்கு தற்போது 6வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆறாவது சம்மன்ல் நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கெஜ்ரிவால் ஆஜராகமாட்டர் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் அமலாக்கத் துறை கெஜ்ரிவாலுக்கு 7ஆவது முறையாகச் சம்மன் அனுப்பி இருந்தது.
ஆனால் கெஜ்ரிவால் செவிசாய்க்கவில்லை.

இந்த நிலையில் இன்று 8வது முறையாக கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இன்று டெல்லி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால் அவர் ஆஜராவாரா என் சந்தேகமும் எழுந்தது.

இந்த நிலையில் அமலாக்கத்துறைக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அதில், மார்ச் 12க்கு பிறகு விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளதாகவும், தேதியை தெரிவித்தால் காணொளி மூலமாக ஆஜராக தயாராக உள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 244

    0

    0