தந்தையை காணவில்லை என அழுது புலம்பிய கன்னிசாமி.. சபரிமலையில் அரங்கேறிய சம்பவம் : வைரலாகும் சிறுவன்.. என்ன நடந்தது?!
Author: Udayachandran RadhaKrishnan12 December 2023, 9:54 pm
தந்தையை காணவில்லை என அழுது புலம்பிய சிறுவன்..சபரிமலையில் அரங்கேறிய சம்பவம் : வைரலாகும் புகைப்படம்.. என்ன நடந்தது?!
சபரிமலை சீசன் தொடங்கியவுடன் பக்தர்கள் கூட்டம் தினம் தோறும் அதிகரித்து வருகிறதது. இதனால் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 நாட்களாக சபரிமலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் பல பக்தர்கள் கூட்டத்தை பார்த்து மிரண்டு போய் தரிசனம் செய்யாமல் பந்தளத்தில் வீடு திரும்பி வருகின்றனர்.
இதற்கிடையே தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வருகிறது. இந்த வீடியோ என்பது நீலக்கல் பகுதியில் எடுக்ககப்பட்டுள்ளது.

அதாவது சபரிமலை பக்தர்கள் தரிசனத்துக்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பக்தர்கள் வாகனம் ஒன்றில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அப்போது வாகனத்தில் இருந்த சிறுவனின் தந்தை காணாமல் போயுள்ளார். தனது தந்தை மாயமானதை அறிந்த அந்த சிறுவன் வாகனத்தின் ஜன்னல் வழியே பார்த்தபடி கதறி அழுதார்.
அப்போது அருகே போலீஸ்காரர் ஒருவர் வர தனது தந்தையை கண்டுபிடித்து தரும்படி அந்த சிறுவன் கைகளை கூப்பியபடி கெஞ்சி கோரிக்கை வைத்தார். இதற்கிடையே சிறுவனின் தந்தையும் அங்கு வந்தார். இதையடுத்து சிறுவன் தனது அழுகையை நிறுத்தினான். இதற்கிடையே தான் அந்த சிறுவன் தனது தந்தையை காணவில்லை எனக்கூறி கைகளை கூப்பி கதறி அழுத வீடியோ இணையதளங்களில் வெளியாகி பார்க்கும் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.