அதிகாலை நடைப்பயிற்சி சென்ற இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. வற்புறுத்தி இளைஞர் செய்த செயல்..!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2024, 5:42 pm

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கோனனகுண்டே அருகே 25 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பக்கத்து வீடுகளில் உள்ள தோழிகளுடன் அதிகாலையில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம்.

அந்த வகையில், கடந்த 2 ஆம் தேதி அன்றும் இளம்பெண் வழக்கம்போல் அதிகாலையில் பக்கத்து வீட்டு தோழிகளுடன் நடைப்பயிற்சி செல்வதற்காக வீட்டின் வெளியே சாலையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கே வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அந்த பெண்ணின் வாயை பொத்தி கட்டிப்பிடித்து முத்தமிட்டு, தகாத செயலில் ஈடுபட்டார். இதனால் அந்த பெண் அதிர்ச்சியடைந்து கத்தி கூச்சலிட்டார்.

இதையடுத்து அந்த பெண் கத்திக்கொண்டே கூச்சலிட்டப்படி பிடியில் இருந்து நழுவி சிறிது தூரம் ஓடினார். எனினும் விடாமல் துரத்திய அந்த நபர் மீண்டும் பெண்ணை பிடித்து வாயை பொத்தினார்.

ஆனால் அந்த பெண் பிடியில் இருந்து நழுவினார். இதனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த பெண் கத்துகின்ற சத்தத்தை கேட்டு நாய்களும் குரைத்தன.

இது தொடர்பான வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது. இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

வைரான வீடியோ காட்சியை பார்த்த பெங்களூர் தெற்கு டிஜிபி லோகேஷ், இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர். இதில் அந்த நபர் பெயர் சுரேஷ் (வயது 25) என்பது தெரியவந்தது. டேக்சி டிரைவர் என்பதும், பல்வேறு நிறுவன பெண்களை வீட்டிற்கு அழைத்து செல்லும் கேப் டிரைவராக பணியாற்றியதும் தெரியவந்தது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 326

    0

    0