கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து… லாரியின் பின்புறம் மோதி அப்பளம் போல நொறுங்கிய கார் : காரில் இருந்த 5 பேரும் பலியான சோகம்!!
Author: Udayachandran RadhaKrishnan8 August 2022, 11:02 am
அமராவதி -அனந்தபுரம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் பிரகாச மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் இன்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக மரணமடைந்தனர்.
குண்டூர் மாவட்டம் ஸ்ரீ ஹரிப்பாடு கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் காரில் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தனர். கார் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கம்பம் அருகே சென்று கொண்டிருந்தபோது நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக மரணமடைந்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த கம்பக் போலீசார் காரில் சிக்கிக் கொண்டிருந்த உடல்களை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.