சினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து.. அந்தரத்தில் பறந்த கார் : பதை பதைக்க வைக்கும் காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
28 July 2024, 4:20 pm

தெலுங்கானா மாநிலம் மேட்சல் – சமீர்பேட்டை ராஜீவ் சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச் சுவரை தாண்டி குதித்து எதிர் திசையில் வந்து கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் இரண்டு பேருந்துகள் மீது பயங்கர வேகத்தில் மோதிய கார் சுக்கு சுக்காக நொறுங்கி அதில் பயணித்த ஹைதராபாத் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் மோகன் (25), தீபிகா (25) ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து காட்சிகள் பின்னால் சென்ற காரின் முன்புறம் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகி உள்ளது.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!