மேடையில் ஏறி ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்ட கல்லூரி மாணவர்.. ஓடோடி வந்த பேராசிரியை : அடுத்து நடந்த அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2023, 2:41 pm

மேடையில் ஏறி ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்ட கல்லூரி மாணவர்.. ஓடோடி வந்த பேராசிரியை : அடுத்து நடந்த அதிர்ச்சி!!

உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் விழா ஒன்று நடந்தது. இந்த விழாவில் மாணவர் ஒருவர் மேடை ஏறினார்.

அப்போது மேடைக்கு கீழ் இருந்த மாணவர்கள் ‛ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷமிட்டு அவரை வரவேற்றனர். அதை கேட்டவுடன் மேடையில் இருந்த அந்த மாணவர் ‛ஜெய் ஸ்ரீராம் நண்பர்களே’ என பதிலளித்தார்.

இதையடுத்து அங்கிருந்த பெண் பேராசிரியர் ஒருவர் வேகமாக மேடை அருகே சென்று அந்த மாணவரை மேடையில் இருந்து இறங்கி செல்லும்படி அறிவுறுத்தினார்.

அதோடு அந்த பேராசிரியர் ஹிந்தி மொழியில், ‛‛இது கலாச்சார நிகழ்ச்சி. இதுபோன்ற கோஷங்களுக்கு அனுமதியில்லை” என கூறி மேடையை விட்டு இறங்கி செல்லும்படி ஆக்ரோஷமாக கூறினார்.

இதனால் ஷாக்கான அந்த மாணவர், ‛‛மாணவர்கள் கூறியதால் பதிலுக்கு தெரிவித்தேன்” எனக்கூறி பேராசிரியர் கேட்கவில்லை. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவத்துக்கு ஒரு தரப்பு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இன்னொரு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே தான் அந்த வீடியோ குறித்துஅறிந்த காஜியாபாத் போலீஸ் கமிஷனர் இந்த விஷயம் குறித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராசிங்ஸ் போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 426

    0

    0