மகள்களை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூரத் தாய்.. அதிர்ச்சி சம்பவம் : அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 November 2023, 2:20 pm

கள்ளக்காதலனுக்கு மகள்களை விருந்தாக்கிய கொடூரத் தாய்.. அதிர்ச்சி சம்பவம் : அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!

மனநலம் பாதிக்கப்பட்ட கணவருடன் கேரளாவைச் சேர்ந்த பெண் தன் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவனை பிரிந்த அவர் தனியாக குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

தனியாக பிரிந்து வந்ததற்கு காரணமே கள்ளக்காதல் என்று கூறப்பட்ட நிலையில் இது உண்மை என நிரூபித்தது அந்த சம்பவம். அடிக்கடி பெண் வீட்டிற்கு வந்த கள்ளக்காதலன் சிசுபாலன் அவர்களுடனேயே சேர்ந்து வசித்து வந்தார்.

சிசுபாலன் தனது கள்ளக்காதலியின் 7 வயது குழந்தையை ஈவு இரக்கமின்றி பலமுறை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் குழந்தையின் அந்தரங்க உறுப்புகளிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த 7வயது குழந்தை தனது 11 வயது சகோதரியிடம் நடந்ததை பற்றி கூறியுள்ளது. இதனிடையே வீட்டிற்கு வந்த மூத்த குழந்தையையும் கள்ளக்காதலன் சிசுபாலன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனிடையே வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என குழந்தைகளை சிசுபாலன் மிரட்டியதால் குழந்தைகள் நடந்ததை வெளியில் சொல்லவில்லை.

ஒரு கட்டத்தில் 11 வயது பெண், தன் தங்கையுடன் சிசுபாலனின் வீட்டில் இருந்து தப்பித்து அவர்களின் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களின் பாட்டியிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளனர்.
இதுபற்றி குழந்தைகள் நல ஆணையத்திற்கு பாட்டி தகவல் கொடுத்தார். அதன்பேரில் குழந்தைகளை குழந்தைகள் இல்லத்திற்கு அதிகாரிகள் தங்க வைத்தனர். அங்கு நடந்த கவுன்சிலிங்கில் நடந்த சம்பவத்தை குழந்தைகள் தெரிவித்தனர்.

இதையடுத்து சிசுபாலன், அவரது கள்ளக்காதலி ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு கேரள சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் மகளை தனது இரண்டு காதலர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்த பெண்ணுக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கேரள சிறப்பு விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுபற்றி சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.எஸ்.விஜய் மோகன் கூறுகையில், ” மகளை தனது இரண்டு காதலர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்த குற்றத்திற்காக தாயாருக்கு 40 ஆண்டுகள் தண்டனையும் , ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த பெண், தனது இரண்டு சிறுமிகளையும் துஷ்பிரயோகம் செய்தது குற்றம். அவர்கள் பாலியல் ரீதியாகவும் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட பெண்ணின் கணவர் ஒரு மனநோயாளி. அதனால் அவர் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி இரண்டு காதலர்களுடன் தங்கியிருந்துள்ளார்.

முதல் காதலன், சிசுபாலன் சிறுமியை ஏழு வயதில் முதல் வகுப்பு படிக்கும் போது கொடூரமாக துஷ்பிரயோகம் செய்திருக்கிறான். அப்போது பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவத்தை குற்றம் சாட்டப்பட்டவரிடம் கூறியுள்ளார்.

ஆனால் அந்த பெண் தாயாக எதுவும் செய்யவில்லை..மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்கொடுமை செய்ய மற்ற காதலனுக்கு உதவி உள்ளாள். நீதிபதி ரேகா, இந்த வழக்கை விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட பெண், தாய்மைக்கே முழு அவமானம் என்றும், அவர் எந்த வகையிலும் மன்னிப்புக்கு தகுதியற்றவர் என்றும் அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.

  • director entered van when shalini pandey changing dress உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே… ஒரு அதிர்ச்சி சம்பவம்!