பள்ளியில் 4ம் வகுப்பு மாணவனை இரும்பு ராடால் அடித்தே கொலை செய்த கொடூர ஆசிரியர் : விசாரணையில் பகீர் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2022, 10:05 pm

4 ஆம் வகுப்பு படித்து வந்த 10 வயது மாணவனை ஆசிரியர் அடித்துக் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் வடக்கு பகுதியில் உள்ள ஹக்லி கிராமத்தில் உள்ள ஆத்ர்ஷ் என்ற தொடக்க பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பாரத் என்ற 10 வயது சிறுவன் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த நிலையில், இன்று காலை பள்ளியில் ஒப்பந்த ஆசிரியராக பணியாற்றி வரும் முத்தப்பா என்பவர் சிறுவன் பாரத்தை கம்பியால் கொடூரமாக தாக்கியிருக்கிறார்.

அதோடு விடாமல் முதல் மாடியில் இருந்து சிறுவனை கீழே தள்ளி விட்டுள்ளார். இதில், சிறுவன் படுகாயம் அடைந்து உயிரிழந்தான்.
சிறுவன் பாரத்தின் தாயாரும் அதேபள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சிறுவனின் தாயரான கீதா பார்கரையும் முத்தையா தாக்கியிருக்கிறார்.

இதில் காயம் அடைந்த கீதா பார்க்கர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளி மாணவனை கொலை செய்த கொடூர ஆசிரியர் தற்போது தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!