நாட்டின் மகள்கள் தோற்றுவிட்டனர்.. பிரஜ் பூஷன் வென்றார் ; ஒரே வார்த்தையில் சாக்ஷி மாலிக் வேதனை!
உத்தரப் பிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியில் 2009 ஆம் ஆண்டிலிருந்து ப்ரஜ்பூஷன் சிங் எம்.பியாக உள்ளார். கடைசியாக நடைபெற்ற 2019 மக்களவைத் தேர்தலில், பிரிஜ் பூஷன் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கைசர்கஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், சிட்டிங் பாஜக எம்.பி. ப்ரஜ்பூஷன் சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்காமல், அவரது மகன் கரண்பூஷன் சிங்கை உத்தரப் பிரதேசத்தின் கைசர்காஞ் தொகுதியின் வேட்பாளராக பாஜக. அறிவித்துள்ளது.
ப்ரஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாரளித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் விளைவாக தான் ப்ரஜ்பூஷன் சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தனது எக்ஸ் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அதில், “நாட்டின் மகள்கள் தோற்றனர்; பிரிஜ் பூஷன் வென்றார்
நாங்கள் அனைவரும் எங்கள் தொழிலை பணயம் வைத்து, வெயிலிலும் மழையிலும் பல நாட்கள் தெருக்களில் தூங்கினோம். இன்று வரை பிரிஜ் பூஷன் கைது செய்யப்படவில்லை. நாங்கள் எதையும் கோரவில்லை, நீதியை மட்டுமே கோருகிறோம். கைது செய்வதை விடுங்கள், இன்று பிரிஜ் பூஷனின் மகனுக்கு சீட்டு கொடுத்து நாட்டின் கோடிக்கணக்கான மகள்களின் மன உறுதியை உடைத்துள்ளீர்கள்.
மேலும் படிக்க: பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகின்றனர்.. காங்கிரஸ் மீது BJP தேர்தல் ஆணையத்தில் புகார்!
ஒரே ஒரு குடும்பத்துக்கு மட்டும் சீட்டு கொடுக்கப்படுகிறது. ஒரு மனிதனுக்கு முன்னால் இவ்வளவு பலவீனமாக நம் அரசு உள்ளதா? ஸ்ரீராமரின் பெயரில் வாக்குகள் மட்டுமே தேவை, அவர் காட்டிய பாதை என்ன?”என்று அவர் பதிவிட்டுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.