அடுத்தடுத்து திருப்பங்களை ஏற்படுத்திய பாஜக பெண் பிரமுகர் மரணம் : தேவைப்பட்டால் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என முதலமைச்சர் உறுதி!!

நடிகை சோனாலி மரணம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்படும் என்று கோவா முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநில பாஜக கட்சியை சேர்ந்தவர் சோனாலி போகத் (வயது 42). இவர் டிவி விவாத நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும், டிவி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். மேலும், வெப் தொடரிலும் சோனாலி நடத்துள்ளார்.
இவர் 2019-ம் ஆண்டு அரியானா சட்டமன்ற தேர்தலில் ஆடம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சோனாலி டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள செயலிகளில் தனது வீடியோக்களை வெளியிட்டு அதிக பார்வையாளர்களையும் பெற்றுள்ளார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இதனிடையே, கோவாவுக்கு சுற்றுலா சென்ற சோனாலி போகத் கடந்த 22-ம் தேதி இரவு மர்மமான முறையில் மரணமடைந்தார்.

ஓட்டலில் இரவு மது விருந்தில் பங்கேற்ற சோனாலிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் சோனாலி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சோனாலியின் தனி உதவியாளர் சுதிர் சக்வான் மற்றொரு உதவியாளர் சுக்விந்தர் சிங் மற்றும் சோனாலி தங்கி இருந்த ஓட்டல் உரிமையாளர் எட்வின் நுனீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், உடற்கூராய்வில் சோனாலிக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து போதைப்பொருள் விநியோகம் செய்த தட்டாபிரசாத் காவ்ங்கர் என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர்.

சோனாலி மரண வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சோனாலியின் மரணம் தொடர்பான மர்மங்கள் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேவை ஏற்பட்டால் சோனாலி போகத் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து திருப்பங்களை சந்தித்து வரும் சோனாலி போகத் மரண வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் பட்சத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Updatenews Udayachandran

Recent Posts

கணவரை இழந்த நடிகைகளுடன் டேட்டிங் : பிரபலத்தின் அந்தரங்க லீலைகள் அம்பலம்!

கணவரை இழந்த நடிகைகளை குறி வைத்து அவர்களுடன் சில பல நாட்கள் பழகி கழட்டி விடுவதே இந்த பிரபல நடிகரின்…

23 minutes ago

இந்தி வாலாக்களாக மாற்ற முயற்சி.. திருமாவளவன் கடும் விமர்சனம்!

இந்தியாவை ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் மாற்ற வேண்டும் எனும் முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது…

24 minutes ago

திமுக ‘இந்த’ தோற்றத்தை உருவாக்குகிறது.. தமிழிசை கடும் சாடல்!

பாஜக, தமிழுக்கு எதிராக செயல்படுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்:…

1 hour ago

ஆசையை காட்டி மோசம் செய்த லைகா நிறுவனம்.. விஜய் மகனுக்கு கல்தா!

லைகா நிறுவனம் தமிழ் சினிமாவை கத்தி படம் மூலம் தயாரிக்க ஆரம்பித்தது. அந்த படம் லைகா நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை…

1 hour ago

’தமிழக மக்களை முட்டாளாக வளர்க்க வேண்டும் என..’ பாஜக ராம சீனிவாசன் பரபரப்பு பேச்சு!

பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…

2 hours ago

பாஜக டூ தனிக்கட்சி.. பிரபல நடிகை திடீர் விலகல்.. காரணம் இதுவா?

பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து…

3 hours ago

This website uses cookies.