ஓடும் ரயிலில் பெண்ணை கட்டிப்பிடிக்க முயன்ற போதை ஆசாமி.. அடுத்த கணமே ஷாக்.. மருத்துவமனையில் அனுமதி!
Author: Udayachandran RadhaKrishnan10 July 2024, 12:09 pm
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து நேற்று மாலை பயணிகளுடன் புறப்பட்ட புவனேஸ்வர் செல்லும் விசாகா எக்ஸ்பிரஸ் நேற்று இரவு 7 மணிக்கு மிரியாலகுடா நிலையத்தை அடைந்தது. அப்போது ரயிலின் வேகம் குறைந்தது.
அதே நேரத்தில் எஸ்-2 பெட்டியில் பயணித்த தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் கழிவறையில் இருந்து இருக்கைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அப்போது ரயில் கதவு அருகே போதையில் நின்று கொண்டிருந்த இருந்த ஒடிசாவை சேர்ந்த பிஸ்வாஸ் அந்தப் பள்ளி ஆசிரியையின் இடுப்பை கட்டிப்பிடிக்க முயன்றதாக தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியை அவனிடமிருந்து தப்ப முயன்ற நிலையில் இரண்டு பேரும் ஓடும் ரயிலில் இருந்து வெளியில் விழுந்து காயம் அடைந்தனர்.
இருவரும் காயங்களுடன் தண்டவாளம் அருகே கிடந்த போது தாண்டவாளம் அருகே நடந்து சென்ற அப்பகுதி மக்கள் உடனடியாக ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
உடனடியாக விரைந்து சென்ற ரயில்வே போலிசார் அந்த ஆசிரியயை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ரயில் தண்டவாளத்தில் போதையில் கிடந்த பிஸ்வாஸ் மற்றொரு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பாதிக்கப்பட்ட அந்த பள்ளி ஆசிரியை அளித்த் புகாரின் பேரில், ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற் கட்ட விசாரணையில் அந்தப் பெண் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிவதும். உறவினர் வீட்டுக்கு சென்று தனது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்த போது சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.