உணவு கொடுக்க சென்ற சிறுவனை தாக்கிய யானை : மகனை காப்பாற்ற போராடிய தந்தை.. வைரலாகும் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan8 April 2022, 8:43 pm
கேரளா : யானைக்கு உணவு கொடுக்க சென்ற சிறுவனை தும்பிக்கையால் தூக்கி தாக்கிய நிலையில் மகனை காப்பாற்ற போராடிய தந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் மலப்புறம் , கீழுபறம்பு பகுதியை சார்ந்த நாசர் என்பவருக்கு சொந்தமான யானைக்கு உணவு கொடுக்க 4 வயதுள்ள ஒரு சிறுவனும் சிறுவனின் தந்தையும் யானையின் அருகில் சென்றுள்ளனர்.
சிறுவன் உணவு கொடுக்க முயன்ற நேரத்தில் திடீரென மிரண்ட யானை அந்த சிறுவனை தும்பிக்கையில் தூக்கி சுற்றிவளைத்து உள்ளது. இதைப்பார்த்த சிறுவனின் தந்தை யானையுடன் போராடி தனது சிறுவனை பெரிய போராட்டத்திற்கு பின் காப்பாற்றியுள்ளார்.
இந்த நிகழ்வு ஆறு மாதத்திற்கு முன்பு நடந்துள்ளது என்றாலும் இதன் செல்போன் காட்சிகள் தற்போது தான் வெளியாகியுள்ளது. 4 வயது தனது குழந்தையை காப்பாற்ற தந்தை நடத்திய போராட்டத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகின்றன.