பணிக்கு சென்றவர்களை ஆக்ரோஷமாக துரத்திய யானைகள்… தூக்கி வீசி மிதித்ததில் பெண் உட்பட இருவர் பலி!!!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2023, 10:31 am

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே உள்ள மல்லநூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், அதே ஊரை சேர்ந்த தேவேந்திரா என்பவரின் மனைவி உஷா தங்கள் ஊரில் இருந்து மேலும் 4 பேருடன் பெங்களூருக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

இன்று காலை மல்லனூர் கிராமத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த யானை ஒன்று அவர்களை விரட்டி சென்றது.

அப்போது உஷா கீழே விழுந்துவிட்ட நிலையில் அவரை யானை மிதித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் உஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தார்.

யானை தாக்கி பெண் மரணமடைந்தது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் உஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

யானைத் தாக்கி உஷா மரணம் அடைந்த சட்ட நேரத்தில் அதே பகுதியில் உள்ள சப்பனிகுண்டா கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவரும் யானை தாக்கி பரிதாபமாக மரணமடைந்தார்.

ஒரே பகுதியை சேர்ந்த இரண்டு பேரையும் ஒரே நாளில் யானை தாக்கி மரணம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது

  • Vidaamuyarchi ticket booking தடபுடலாக தொடங்கிய “விடாமுயற்சி” டிக்கெட் முன்பதிவு…முண்டியடிக்கும் ரசிகர்கள்..!