வீட்டுக்கே வந்த அமலாக்கத்துறை.. அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
20 January 2024, 4:36 pm

வீட்டுக்கே வந்த அமலாக்கத்துறை.. அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு!

ஜார்கண்ட் மாநிலத்தில் நில மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் பணமோசடி வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரனை விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு வந்துள்ளனர். இதற்கிடையில், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க ஹினு விமான நிலையத்தில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தின் வெளியே போலீஸ் தடுப்புகளுடன், சிஆர்பிஎஃப் வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் முதல்வர் இல்லத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராஞ்சி மூத்த போலீஸ் சூப்பிரண்டு சந்தன் குமார் சின்ஹா ​​கூறுகையில், “மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், 1000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறையின் விசாரணை முடியும் வரை, முதல்வர் இல்லம் அருகே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதாக” தெரிவித்தார்.

ஜனவரி 13 ஆம் தேதி, அமலாக்க இயக்குனரகம் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு 8 வது சம்மன் அனுப்பியது. ஜனவரி 16 முதல் ஜனவரி 20-க்குள் நில மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதைத் தொடர்ந்து அமலாக்க சம்மனுக்கு பதிலளித்த முதல்வர் ஜனவரி 20-ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம் என கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், நிலமோசடிவழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வாக்குமூலத்தை பதிவு செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். முன்னதாக, முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை 7 முறை சம்மன் அனுப்பியும் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் முதல்வர் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துரையை கண்டித்து முக்தி மோர்ச்சா கட்சியினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடந்து வரும் நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 311

    0

    0