முன்னாள் முதலமைச்சர் சென்ற ஹெலிகாப்டர் வேறு வழியில் சென்றதால் பரபரப்பு : பைலட்டுக்கு வந்த எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
20 January 2024, 6:57 pm

முன்னாள் முதலமைச்சர் சென்ற ஹெலிகாப்டர் வேறு வழியில் சென்றதால் பரபரப்பு : பைலட்டுக்கு வந்த எச்சரிக்கை!!

நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி பொதுக்கூட்டங்களை முழு வீச்சில் நடத்தி வருகின்றன.

அந்தவகையில் ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஜனஜன சக்தி கட்சியுடன் கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு என்ற பகுதியில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டரில் சென்றுள்ளார்.

அப்போது அவர் சென்ற ஹெலிகாப்டர் வழி தவறி வேறு பாதையில் சென்றுள்ளது. இதனை கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், பைலட்டுக்கு எச்சரிக்கை தெரிவித்தனர். இந்த எச்சரிக்கையை அடுத்து ஹெலிகாப்டர் மீண்டும் விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு பகுதிக்கு சென்று பாதுகாப்பாக தரையிறங்கியது.

  • Squid Game 2 Today Release timing on Netflix இன்று வெளியாகும் SQUID GAME 2…. எத்தனை எபிசோடுகள் தெரியுமா?
  • Views: - 408

    0

    0