கோவையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 12 வயது சிறுவன் இமயமலை தொடர்களில் ஒன்றான பியாஸ் குண்ட் மலையில் சுமார் 14,000 அடி உயரம் ஏறி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கோவை, சின்னவேடம்பட்டி சக்தி நகர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, வினய கஸ்தூரி தம்பதியின் மூத்த மகன் யத்தீந்ரா (12).
யத்தீந்திரா ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டதை அவரது இரண்டாவது வயதில் அறிந்த பெற்றோர், மனம் தளராமல் குழந்தைக்கு யோகா, கராத்தே, நீச்சல் பயிற்சிகளை கற்றுக் கொடுத்து வந்தனர்.
தொடர் பயிற்சிகளால் மகனிடம் முன்னேற்றம் இருப்பதை அறிந்த பெற்றோர், சிகரம் அறக்கட்டளை என்ற தன்னார்வ அமைப்பின் உதவியுடன் இமயமலை பகுதிகளில் வழக்கமாக டிரெக்கிங் செல்லும் குடும்ப நண்பரான ஆண்ட்ரூ ஜோன்ஸ் என்பவருடன் தனியாக மலையேற்றப் பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தின் இமய மலைத் தொடர்களில் ஒன்றான பியாஸ் குண்ட் மலையில் பயிற்சியாளர் ஆண்ட்ரூ ஜோன்ஸுடன் ஏறத் தொடங்கிய சிறுவன் யத்தீந்திரா, 4 நாட்களில் சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தை எட்டி அசத்தினார்.
மேலும் அங்கு தேசியக் கொடியை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதன் மூலம் இமயமலை தொடர்களில் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டு சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தை எட்டிய முதல் ஆட்டிசம் பாதித்த சிறுவன் என்ற சாதனையை யத்தீந்ரா நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.