துப்பாக்கி முனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் : 5வது மாடியில் இருந்து தள்ளிவிட்ட கொடூரம்.. தலைநகரில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2024, 9:26 am

16 வயது சிறுமி துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்டு கட்டிடத்தின் 5 வது மாடியில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் தென்மேற்கு பகுதியான துவாரகா நகரில் உள்ள குடியிருப்பில் கடந்த திங்கள்கிழமை பெற்றோர்கள் வெளியில் செல்லவே 16 வயது சிறுமி தனியாக இருந்துள்ளார்.

இதையறிந்து வீட்டின் உள்ளே நுழைந்த பக்கத்து வீட்டு நபர் சிறுமியை துப்பாக்கியை காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக பிடித்து அருகில் இருந்த கட்டடத்துக்கு அழைத்துசென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

அதனபின் சிறுமியை 5வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளான். கீழே விழுந்ததில் சிறுமியின் காலில் எலும்புமுறிவு ஏற்ப்டுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சம்பவம் தொடர்பாக பெண்ணின் வாக்குமூலத்தைப் பெற்ற காவல்துறையினர் தப்பிசென்ற நபர் மீது வழக்குப் பதிந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?