காவலரின் ‘காம லீலை’.. சிறுமியை 4 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம் : கான்ஸ்டபிள் செல்போனில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2024, 11:07 am

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரன் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியில் இருப்பவர் பிரதீப்.

காவலர் பிரதீப் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் முதலில் நட்பை ஏற்படுத்தினார். அதனை தொடர்ந்து அந்த சிறுமியிடம் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

அந்த சிறுமி என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அவர் வேறொரு பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தன்னுடைய ரகசிய காதலனுக்கு திருமணம் ஆனது தெரிந்த அந்த சிறுமி அவருடன் இருந்த உறவை துண்டிக்க முயன்றிருக்கிறார்.

ஆனால் அந்த கான்ஸ்டபிள் சிறுமியுடன் உல்லாசமாக இருந்தபோது ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோக்களை காண்பித்து நான் எங்கு கூப்பிட்டாலும் வரவேண்டும். இல்லை என்றால் இந்த வீடியோக்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.

இது பற்றி அந்த சிறுமி தன்னுடைய பெற்றோர்களிடம் கூறிய நிலையில் அந்த சிறுமியின் பெற்றோர் இன்று கான்ஸ்டபிள் பிரதீப் லீலைகள் பற்றி ராஜேந்திர நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் காவலர் பிரதீப் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக காவலர் பிரதீப் வைத்திருந்த செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிறுமியுடன் தான் உல்லாசமாக இருந்தபோது அந்த செல்போன் மூலம் அவர் பலமுறை வீடியோ எடுத்திருப்பது தெரியவந்தது.

அந்த வீடியோக்களை அந்த சிறுமியிடம் காண்பித்து நான் விரும்பும் போது அழைக்கும் இடத்திற்கு வர வேண்டும். இல்லை என்றால் இவற்றை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்று அவர் மிரட்டியது விசாரணையில் தெரியவந்தது.

கான்ஸ்டபிள் பிரதீப் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!