பள்ளியில் பெண் ஊழியருடன் சல்லாபத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் : பாடம் புகட்டிய மாணவர்கள்.. லீக்கான வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2022, 4:59 pm

தலைமை ஆசிரியரின் ஜல்சா லீலைகளை மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்த அம்பலப்படுத்தியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சிலகலப்போடி அருகே ஆந்திர மாநில சிறுபான்மையினர் குருகுல பாடசாலை உள்ளது.

அங்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆனந்தபாபு. அதே பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் கிளார்க் வேலை செய்யும் பெண்ணுடன் தலைமை ஆசிரியர் ஆனந்தபாபு ரகசிய தொடர்பில் இருந்து வந்தார்.

பகல் நேரத்தில் பள்ளி அறையை இரண்டு பேரும் தங்களுடைய தனிப்பட்ட பள்ளி அறையாக பயன்படுத்தி வந்தனர்.

இதனை கவனித்த மாணவர்கள், தலைமையாசிரியர் ஆனந்த் பாபு ஆனந்தமாக பெண் ஊழியருடன் சல்லாபத்தில் ஈடுபட்டடு போது வீடியோ எடுத்து அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

இதனை பார்த்த பல்வேறு தரப்பினரும் தலைமை ஆசிரியரை பணி நீக்கம் செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர்.

ஆனால் கல்வித் துறை அதிகாரிகள் இது தொடர்பாக எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை என்று கூறுகின்றனர். பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர், பள்ளியை தனது பள்ளியறையாக மாற்றி சல்லாபத்தில் ஈடுபட்ட சம்பவம் மாணவர்கள், பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ