தனியாக வசித்த மனைவியின் வீட்டை நோட்டமிட்ட கணவன்.. நடுரோட்டில் கழுத்தை பிளேடால் அறுத்த கொடூரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2023, 7:04 pm

தனியாக வசித்த மனைவியின் வீட்டை நோட்டமிட்ட கணவன்.. நடுரோட்டில் கழுத்தை பிளேடால் அறுத்த கொடூரம்!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பூர்ணா மார்க்கெட் பகுதியில் வசிக்கும் வாசுபள்ளி பிரசாத் – நீலிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவரது இல்லற வாழ்க்கை சில வருடங்கள் சுமூகமாகவே இருந்தது. இந்நிலையில் சில மாதங்களாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நீலிமா கணவனை பிரிந்து அரிலோவா டிஐசி பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரசாத் தன்னுடைய தாய் முத்தியாளம்மா உடன் நீலிமா வசிக்கும் வீட்டுக்கு வந்தார். நீலிமாவை வெளியே அழைத்து என்னை வேண்டாம் என கூறி இங்கு யாருடன் குடும்பம் நடத்துகிறாய் என கூறி சண்டை போட்டுள்ளார்.

பின்னர் தான் கொண்டு வந்த பிளேடால் பிரசாத், தனது மனைவி நீலிமாவை கண்மூடித்தனமாக தாக்கி காயப்படுத்தினார். இதில் கழுத்து முகத்தின் மீது பலத்த காயம் ஏற்பட்டது.

ரத்தம் வெளியேறிய நிலையில் நீலிமாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நீலிமா அளித்த புகாரின் பேரில் விசாகப்பட்டணம் போலீசார் பிரசாத் மற்றும் அவரது தாயார் முத்தியாளம்மா இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Good Bad Ugly Hit of Flop குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?