மனதை உருக வைத்த சம்பவம்… வெள்ளத்தில் இருந்து கைக்குழந்தையை காப்பாற்றிய காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2024, 4:01 pm

ஆந்திரா விஜயவாடாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் இன்னும் வடியவில்லை.

ஒரு சில பகுதிகளில் வெள்ளம் சற்று குறைந்த நிலையில் சிங் நகர் காலனியில் கழுத்தளவு உயரத்திற்கு மழை நீர் தேங்கி நிற்கிறது.

எனவே சிங்நகர் காலனியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து அதிகாரிகள் அனுப்பி வைத்த படகுகள் மூலமும் சொந்தமாக ஏற்பாடுகளை செய்தும் வெளியேறி அரசு அமைத்துள்ள முகாம்களுக்கு செல்கின்றனர்.

இந்த நிலையில் சிங்நகர் காலனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களுடைய நான்கு மாத குழந்தையுடன் கழுத்தளவு தண்ணீரில் நடந்து வெளியேறிய போது குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து தண்ணீரில் இழுத்துச் சென்று அங்கிருந்து வெளியேறினர்.

இந்த காட்சி பார்ப்பவர்களை பார்ப்பவர்களை பதட்டமடைய வைத்துள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 302

    0

    0