நீட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.. இது முக்கிய பிரச்சனை : ராகுல் காந்தி வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2024, 6:04 pm

இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த அனுமதி அளிக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வீடியோ வெளியிட்டு பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், நீட் தேர்வு மற்றும் தற்போது நிலவும் நீட் வினாத்தாள் தாள் கசிவு விவகாரம் தொடர்பாக I.N.D.I.A எதிர்க்கட்சிகள் அரசுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த விரும்புகிறது.

இன்று பாராளுமன்றத்தில் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. இது இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது.

இந்த விவகாரத்தில் விவாதம் நடத்தி மாணவர்களுக்கு உரிய நியாத்தை வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்துகிறோம் என பதிவிட்டு இருந்தார். மேலும் வீடியோ பதிவில் கூறுகையில், இந்த விவாதம் அனைத்து மனவர்களுக்கானது.

நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்பது எல்லாருக்கும் தெரியும். இதில் பெரிய மோசடி நடந்துள்ளது. நீட் தேர்வுக்காக வருடக்கணக்கில் பயிற்சி பெறுகிறார்கள்.

அவர்களின் கனவு இப்படியான முறைகேடுகளால் தகர்க்கப்டுகிறது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இதனை அனைவரும் அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இந்த விவாதத்தை அமைதியாக நடத்த நான் கேட்டுக்கொள்கிறேன். நீட் விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளளது.

இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும். இதில் மாணவர்கள் மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து
நாங்கள் விவாதம் நடத்த தயாராக இருக்கிறோம் என்று ராகுல் காந்தி வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 265

    0

    0