நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து கலர் புகை ஸ்பிரே வீசிய விவகாரம் : முக்கிய குற்றவாளிக்கு 7 நாள் போலீஸ் காவல்!

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2023, 8:16 pm

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து கலர் புகை ஸ்பிரே வீசிய விவகாரம் : முக்கிய குற்றவாளிக்கு 7 நாள் போலீஸ் காவல்!

டெல்லி நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் நேற்று முன்தினம் திடீரென்று லோக்சபாவின் பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் குதித்தனர்.

அவர்கள் மஞ்சள் நிற புகையை வெளியேற்றும் ஸ்பிரே மற்றும் கலர் புகை குண்டுகளை வீசினர்.அதேபோல் நாடாளுமன்றத்தின் வளாகத்தில் பெண் உள்பட 2 பேர் இதேபோல் கலர் புகை குண்டுகளை வைத்து பீதியை ஏற்படுத்தினர். இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் அவர்கள் சாகர் சர்மா மற்றும் கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த டி மனோ ரஞ்சன் (வயது 35), ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே (25) என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரிடமும் டெல்லி தனிப்படை போலீசார் மற்றும் தீவிரவாத ஒழிப்பு படையினர் விசாரித்தனர்.

இதையடுத்து 4 பேரும் நேற்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 7 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இந்த சம்பவத்துக்கு சூத்திரதாரியாக கருதப்படும் லலித் ஜா நேற்று டெல்லி போலீசில் சரணடைந்தார். பீகாரை சேர்ந்த இவர் கொல்கத்தாவில் ஆசிரியராக இருக்கிறார். இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து இன்று லலித் ஜா டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர். இவரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி போலீஸ் காவலில் எடுக்க மனு செய்தனர். இதையடுத்து லலித் ஜாவை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் இருந்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 359

    0

    0