பாலிவுட்டே வாயடைத்து போயிருச்சு… The Kashmir Files படக்குழுவினரை பாராட்டிய மோடி : சர்ச்சை பதிவிட்ட பிரபல நடிகை.. லீவு விட்ட மாநில அரசு!!
Author: Udayachandran RadhaKrishnan14 March 2022, 6:15 pm
சமீபத்தில் வெளியாகி மாஸ் காட்டி வரும் படம் தி காஷ்மீர் ஃபைல்ஸ். 80களில் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீரில் நடந்த கிளர்ச்சியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்.
காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை தோலுருத்தி காட்டப்பட்டுள்ளதாக படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தை விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் இயக்குநரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேற்று முன்தினம் வெளியான படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்த படத்திற்கு அரசியல் கட்சியனர் ஆதரவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக உண்மை மறைக்கப்பட்டுள்ளதாக திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் பாஜக இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.
காஷ்மீரில் இந்துக்கள் வெளியேறியதை அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். மேலும் துணிச்சலுடன் இந்த படத்தை உருவாக்கிய இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
பிரதமரை சந்தித்த பின் படக்குழுவினர், தி காஷ்மீர் பைல்ஸ் குறித்து பிரதமரின் பாராட்டும், உன்னதமான வார்த்தைகளும் தான் படத்தை மேலும் சிறப்பு செய்கிறது என தெரிவித்தார்.
இந்த நிலையில் மத்திய பிரேதசம் மாநில அரசு தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்ப்பதற்காக அம்மாநிலத்தில் உள்ள போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். முன்னதாக கேளிக்கை வரியில் இருந்து இந்த படத்துக்கு விலக்கு அளிப்பதாக முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாவில், பிரதமர் பாராட்டிய இந்த படம் குறித்து பாலிவுட் வட்டாரங்களில் நிலவும் மயான அமைதியை கவனியுங்கள். இந்த படம் ஒவ்வொரு கட்டுக்கதையையும் உடைத்துள்ளது. இந்த வருடத்தின் வெற்றிகரமான மற்றும் லாபம் ஈட்டும் படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மலிவான விளம்பரமும் இல்லை, வசூல் குறித்து எந்த வித போலி கணக்குகளும் இல்லை.. தேசிய விரோத மாஃபியாகக்களின் செயல்திட்டங்கள் இல்லை ஆனால் இந்த படம் குறித்து அமைதியை கடைபிடிப்பது ஏன் என தெரியவில்லை, நாடு மாறும் போது படங்களும் மாறும் என அதிரடியாக குறிப்பிட்டுள்ளார்.
5
0